உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.
கதிமா தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் (Bhuwan Chandra Kapri) தோல்வியுற்றார்.
அதேபோல், லால்குவான் தொகுதியில் போடியிட்ட முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் பாஜக வேட்பாளர் மோகன் சிங்கிடம் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மேலும், கங்கோத்ரியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் அஜய் கோதியால் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியுற்றார்.