கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற உத்தரகாண்டில் நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகின்றது. மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், தற்போதைய நிலவரப்படி 44 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. போலவே காங்கிரஸ் 23 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆம் ஆத்மி எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.
தற்போது உத்தரகாண்டில் பாஜக தான் ஆட்சியிலுள்ளது குறிப்பிடத்தக்கது. இருக்கும் நிலையிலும், அங்கு முதல்வராக இருக்கும் புஷ்பர் சிங் தாமி தான் தேர்தலை எதிர்கொண்ட இடத்தில் பின்னடைவிலேயே இருக்கிறார். தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளிவந்துவரும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் உத்தராகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான வேலைகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க.வும் இதே நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் எந்தக்கட்சி ஆட்சி அமைக்க போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017 தேர்தலின்போது, உத்தரகாண்டில் 70 இடங்களில் 57 இடங்களில் பெருவாரியான வெற்றியை பெற்று பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. அத்தேர்தலில் காங்கிரஸ் வெறும் 11 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது. கடந்த முறை பெற்ற தோல்வியிலிருந்து மீளும்வகையில், இந்த வகையில் செயல்படுவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ரவாத் பேசியுள்ளார்.
சமீபத்திய செய்தி: கோவா தேர்தல் முடிவு: முன்னாள் முதல்வரின் மகன் பின்னடைவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM