ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 65 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 49 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும் மற்றவை ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிரோமணி கட்சி 5 இடங்களிலும், பாஜக 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
இதையும் படியுங்கள்…
உத்தர பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை – வாரணாசி பகுதியில் 144 தடை உத்தரவு