லக்னோ:
மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளில் பாஜக 265 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து மீண்டும் அந்த மாநிலத்தில பாஜக ஆட்சி அமைக்கிறது.
அதற்கு அடுத்தப்படியாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 133 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் அம்மாநிலத்தின் மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றும் நிலை உள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கோ 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுமே இரண்டு இடத்தை கூட தாண்ட முடியவில்லை.
இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பரிதாப தோல்வியை சந்தித்து உள்ளன.
அயோத்தியா மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 4 இடங்களை பாஜக கைப்பற்றுகிறது.இதேபோல் நொய்டா மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 இடங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.
லக்கிம்பூர் பகுதியில் வாகனம் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் இந்த தேர்தலில் பிஜேபிக்கு பின்னடைவாக இருக்கும் என கருதப்பட்டது.ஆனால் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதி களிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்… 5 மாநில தேர்தல் முடிவு- பா.ஜனதா பாராளுமன்ற குழு இன்று மாலை கூடுகிறது