லக்னோ:
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. தொடக்கம் முதலே ஆளும் பா.ஜ.க. மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கோரக்பூர் நகர தொகுதியில் 1,65,499 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சுபாவதி சுக்லா 62,109 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார்.
இதன்மூலம் சமாஜ்வாடி வேட்பாளரை விட 1.03 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அபார வெற்றி பெற்றார். மொத்த வாக்குகளில் யோகி ஆதித்யநாத் 66.18 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்…ஆம் ஆத்மியின் வெற்றி புரட்சிகரமானது- அரவிந்த் கெஜ்ரிவால்