எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டு பிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்..!!

எகிப்தின் லக்ஸர் நகரின் மேற்குக் கரையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஒரு சவக் கிடங்கை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது 

நகரத்தின் பெயர் ஏடன்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நகரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. அதன் பெயர் ஏடன். இந்த தொலைந்து போன நகரம் துட்டன் காமனின் (Tooten Khamen) கல்லறைக்குப் பிறகு மிகவும் முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக நிபுணர்களால் கருதப்படுகிறது.

மேலும் படிக்க | Egyptian Mummy: மம்மியின் வயிற்றில் சிதையாத ‘கரு’; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

இந்த நகரம் மிகவும்  முக்கியமான நகரமாக இருந்தது எனக் கூறப்படுகிறது. இது எகிப்தின் மிகவும் ஆதிக்கம் கொண்ட பாரோ இராஜ்ஜியங்களில் ஒன்றாகும். இங்கு அமென்ஹோடெப் III என்ற அரசனால் ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது. கிமு 1391 முதல் 1353 வரை எகிப்தை ஆண்டார்.

பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் 

பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் எகிப்தியலாஜிஸ்ட் பெட்ஸி பிரைன், ஏடன் நகரம் பண்டைய காலத்தின் வாழ்க்கை பற்றிய சில முக்கிய தகவல்களை கொடுக்கும் என்று கூறியுள்ளார். இந்த பாழடைந்த நகரத்தில் வண்ண மட்பாண்டங்கள், நகைகள் மற்றும் களிமண் செங்கற்கள் போன்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | தொல்பொருள் பொக்கிஷமான எகிப்து வெளிப்படுத்தும் புதிய தொல்லியல் உண்மை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.