எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்| Dinamalar

புதுச்சேரி-லாஸ்பேட்டையில், கமலா அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., காங்., மாநில தலைவர் சுப்ரமணியன், கமலா அறக்கட்டளையின் முதன்மை செயலர் ரமா ஆகியோர் மகளிர் தினம் குறித்து சிறப்புரையாற்றினர்.கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது விழாவில், காங்., தொகுதி செயலாளர் நந்தா கலைவாணன், மாநில பிரதிநிதி ஐயப்பன், வட்டார தலைவர் ராஜா, கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.