பெண் குழந்தைகள் உள்ளவர்கள் நிச்சயம் இந்த பாலிசியினை கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் எல்ஐசி-யின் இந்த பாலிசி பெண் குழந்தைகளின் படிப்புக்கும், திருமண செலவுக்கும் கவலையே பட வேண்டிய அவசியமிருக்காது.
மொத்தத்தில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
இது பெண் குழந்தைகளுக்கு நிதி ரீதியாக மிக பெரிய பாதுகாப்பினை கொடுக்கும்.
எல்ஐசியின் கன்யாதான் பாலிசி
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பாலிசி எல்ஐசியின் கன்யாதான் பாலிசி பற்றி தான்.
எல்ஐசியின் கன்யாதான் பாலிசி காலம் 13 – 25 ஆண்டுகளாகும். இந்த பாலிசியினை எடுத்த பின் குறைந்தது 3 வருடங்களுக்காவது, நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டும். கடைசி 3 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. இந்த பாலிசியினை 1 வயது குழந்தைக்கு கூட எடுத்துக் கொள்ளலாம். எனினும் குழந்தையின் தந்தைக்கு வயது 18 – 50 வயது இருக்க வேண்டும்.
எவ்வளவு க்ளைம் செய்யலாம்?
இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ளலாம். அதிகபட்ச தொகை என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பாலிசி காலம் உங்களது பெண் குழந்தையின் வயதுக்கு ஏற்ப குறைத்துக் கொள்ளலாம். அதோடு இந்த திட்டத்தில் உங்களது வருமானத்திற்கு ஏற்ப பிரீமியத்தினை கூட்டவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.
பயனுள்ள திட்டம்
சில பாலிசிகளில் ஆரம்பத்தில் என்ன பிரீமியம் செலுத்துகிறீர்களோ, இறுதிவரையில் அதனையே செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் கன்யாதான் திட்டத்தில் உங்கள் கையில் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதிகரித்தும் செலுத்தலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வரி விலக்கு
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏற்றதொரு பாலிசி என்ற நிலையில், இந்த பாலிசி 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே போல் மெச்சூரிட்டி அல்லது இறப்பின் மூலம் கிடைக்கும் க்ளைமுக்கும் பிரிவு 10 (10D)யின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.
கல்வி & திருமணத்திற்கு ஏற்றது
பாலிசிதாரர், பாலிசி எடுத்த பிறகு எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், குடும்பத்தினர் மீத பிரீமியத்தினை செலுத்த வேண்டியதில்லை. அதோடு ஒவ்வொரு வருடமும் எல்ஐசி குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாயினை கொடுக்கும். மேலும் பாலிசி முடிந்த பின்னர் நாமினிக்கு 27 லட்சம் ரூபாய் கொடுக்கும். ஆக இந்த காப்பீட்டுக் கொள்கை பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு மிக ஏற்றது.
ரூ.27 லட்சம் எப்படி?
இதே நீங்கள் தினசரி 121 ரூபாய் அல்லது மாதம் 3,600 ரூபாய் பிரீமியமாக செலுத்தினால், 25 வருடம் செலுத்தியிருந்தால், 25 வருடங்களுக்கு பிறகு 27 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும். உங்கள் பெண் குழந்தைகளுக்கு திருமணமே முடிந்தாலும் அதன் பிறகும் பிரீமியத்தினை செலுத்தலாம்.
கடன் வாங்கலாமா?
எல்ஐசியின் இந்த கன்யாதான் பாலிசியினை பிணையமாக வைத்து கடன் பெற முடியும். எனினும் தொடர்ந்து 3 வருடங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால் மட்டுமே கடன் பெற முடியும். இந்த பாலிசி எடுத்த 13 மாதங்களுக்குள் தற்கொலை செய்து கொண்டால் க்ளைம் செய்ய முடியாது.இந்த பாலிசியினை NRIகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
just invest Rs.121 per day to get Rs.27 lakh in this LIC policy: check details
just invest Rs.121 per day to get Rs.27 lakh in this LIC policy: check details/எல்ஐசியில் இப்படி ஒரு பாலிசி இருக்கா.. எதிர்காலத்தை பற்றி கவலையே வேண்டாம்..!