ஏப்ரல் 1, 2022 முதல் கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கப்பட்ட வருவாய்க்கு 2023 – 2024 முதல் ஆண்டுகளில் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இது சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என முன்னணி எக்ஸ்சேஞ்ச்கள் கூறுகின்றன.
3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!
இதே ஒரு தரப்பு அரசின் இந்த முடிவால் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் குறையலாம் எனவும் கூறுகின்றன.
கிரிப்டோகளுக்கு 30% வரி
கிரிப்டோகரன்சிகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரியும் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல 1% டிடிஎஸ் விதியும் ஜூலை 2022 முதல் அமலுக்கு வரவுள்ளன.
தற்போதைய நிலவரப்படி பல்வேறு எக்ஸ்சேஞ்ச்களில், 3 பில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி சொத்துகள் உள்ளன. இதில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் 50000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்துள்ளனர். ஆக அரசின் இந்த வரி விதிப்பானது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இது நல்லதல்ல?
CoinDCXன் CEO மற்றும் இணை நிறுவனர் சுமித் குப்தா, கிரிப்டோ வரி விதிப்பு ஒரு நேர்மறையான படியாகும். எனினும் ஒரு தரப்பு இது வரவேற்கதக்க நல்ல விஷயம். எனினும் சூதாட்டங்களுக்கு விதிப்பது போல 30% வரி என்பது, நீண்டகாலத்திற்கு நல்ல தொழில் நுட்பத்திற்கு நல்ல விஷயமல்ல.
பெரிய சுமை
பங்கு வர்த்தகத்தில் இழப்புகள் ஏற்பட்டாலும், அதனை முன்னோக்கி செல்ல அரசாங்கம் அனுமதித்திருந்தாலும், அதேபோல கிரிப்டோகரன்சிகளையும் அனுமதிக்க வேண்டும். மேலும் 1% டிடிஎஸ் என்பது பெரிய சுமையாக இத்துறைக்கு இருக்கும் என்றும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
வரியில் இன்னும் மாற்றம் செய்யலாம்
இதேபோல காயின்ஸ்விட்ச் (coinSwitc Kuber) எக்ஸ்சேஞ்சின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஆஷிஷ் சிங்கால், கிரிப்டோகரன்சிக்கு பட்ஜெட்டில் 30% வரி முன்மொழியப்படிருந்தாலும், இதில் இன்னும் சீர்திருத்தம் செய்யப்படலாம்.
கிரிப்டோவின் இந்த நிலை பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. இது மற்ற சொத்து வகுப்புகளுக்கு இணையாக கிரிப்டோவையும் கருத்தில் கொள்ளும் வாய்ப்பு வரலாம்.
Cryptocurrency tax from April 1, 2022: Exchanges say small investors may impacted
Cryptocurrency tax from April 1, 2022: Exchanges say small investors may impacted/ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய கிரிப்டோகரன்சி வரி.. சிறு முதலீட்டாளர்களுக்கு பிரச்சனை!