ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்த வரலட்சுமி
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. முறைப்படி மேற்கத்திய நடனம் பயின்ற வரலட்சுமி போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர்.சந்திரமவுலி, சண்டக்கோழி 2, சர்கார், நீயா 2, வெல்வெட் நகரம், கன்னிராசி உள்பட பல படங்களில் நடித்தார்.
சமீபகாலமாக தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல், நான்தி, படங்களில் நடித்த அவர் தற்போது யசோதா, ஹனுமான், இன்னும் தலைப்பிடப்டாத கோபிநாத் படங்களில் நடித்து வருகிறார். அதிகமான தெலுங்கு வாய்ப்புகள் வருதால் வரலட்சுமி ஐதராபத்தில் குடியேறுகிறார்.
இதுகுறித்து அவர் தனது சென்னை தோழிகளுடன் இருக்கும் படங்களை ஸ்லைட் ஷோவாக பதிவிட்டு அதனுடன் இப்படி எழுதியிருக்கிறார்: நல்லது, கெட்டது மற்றும் பல சங்கடமான நேரங்களில், எனக்காக எப்போதும் உடன் இருந்த இந்த அற்புதமான மனிதர்களுக்கு நன்றி. என்னுடைய கடைசி வார இறுதி நாட்களை அவர்களுடன் சென்னையில் கழித்ததே பெருமையாக இருக்கிறது. இனி என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம்.
ஆமாம், நான் ஐதராபாத்துக்கு செல்கிறேன். நான் பயமாகவும் பதற்றமாகவும் இருக்கிறேன். நான் அதிகமாக உங்களை நேசிக்கிறேன். நான் உங்களுக்கு நன்றி சொல்ல முடியாது, காரணம் நீங்கள் என் குடும்பம். என் வாழ்க்கை. அனைவரும் எனது ஒரே குடும்பம் என்பதால் அவர்களுக்கு நண்பர்களின் ஆசியும் அன்பும் ஆதரவும் எப்போதும் வேண்டும். என்று கூறியுள்ளார்.