ஆஸ்திரியாவில் நடந்த ஐநா அணுசக்தி மாநாட்டில் உக்ரைன் போரைப் பற்றி ரஷ்ய தூதர் தவறான தகவலைக் கூறியதாகக் கூறி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஒட்டு மொத்தமாக வெளிநடப்புச் செய்தனர்.
வியன்னாவில் நடந்த அணுசக்தி மாநாட்டில், உக்ரைனின் அணுசக்தி நிலையங்களை சுற்றி ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்தது.
அப்போது ரஷ்யப் பிரதிநிதி உக்ரைன் போர் குறித்து தவறான தகவலைக் கூறியதால் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மொத்தமாக வெளிநடப்புச் செய்தனர்.
இந்தக் கூட்டத்தில் உக்ரைன் அணுசக்தி நிலையங்கள் அருகில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. தவறான தகவலைக் கூறியதற்காக ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.