ஒன்னுல்ல, மொத்தம் 7 சரவெடி; உ.பி.,யில் தெறிக்கவிட்ட யோகி ஆதித்யநாத்!

உத்தரப் பிரதேச
மாநிலத்தில் 7 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில்
பாஜக
அபார வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 202.

இதனை ’மேஜிக் நம்பர்’ என்றும் அழைப்பர். தற்போதைய நிலவரப்படி, பாஜக 267, எஸ்.பி 127, பி.எஸ்.பி 3, காங்கிரஸ் 3, பிற காட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதன்மூலம்
யோகி ஆதித்யநாத்
தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்படவுள்ளன. அதாவது,

1 – உத்தரப் பிரதேசத்தில் 70 ஆண்டுகளில் 21 முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். இதில் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்துவிட்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமரும் முதல் ’முதல்வர்’ என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெறுகிறார்.

2 – ஐந்து ஆண்டுகள் முழுவதுமாக ஆட்சியை நிறைவு செய்யும் மூன்றாவது முதல்வர் யோகி என்பது குறிப்பிடத்தக்கது.

3 – தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வர் நாற்காலியில் அமரும் 5வது நபர் என்ற பெருமையும் யோகியை போய் சேருகிறது.

4 – கடைசியாக 1985ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேசத்தில் என்.டி.திவாரி அடுத்தடுத்து முதல்வராக பதவி வகித்தார். இதனை 37 ஆண்டுகளுக்கு பின்னர் யோகி சாதித்து காட்டப் போகிறார்.

5 – பாஜகவில் இருந்து முதல்வராக மீண்டும் அரியணையில் அமரும் முதல் நபர் என்ற பெருமையும் பெறுகிறார்.

6 – கடந்த 15 ஆண்டுகால உத்தரப் பிரதேச அரசியல் வரலாற்றில் எம்.எல்.ஏவாக இருந்து யாருமே முதல்வர் பதவியில் அமர்ந்ததில்லை. அனைவருமே சட்டப்பேரவை மேலவையில் தேர்வு செய்யப்பட்டவர். இது யோகிக்கும் பொருந்தும். இந்நிலையில்
கோரக்பூர்
அர்பன் சட்டமன்ற தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறார் யோகி ஆதித்யநாத். இதன்மூலம் 15 ஆண்டுகளில் முதல் எம்.எல்.ஏ சி.எம் யோகி ஆவார்.

7 – குறிப்பாக நொய்டாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர்கள், தனது ஆட்சியை முழுமையாக நிறைவு செய்ய மாட்டார்கள். இல்லையெனில் அடுத்த தேர்தலில் தோல்வியை தழுவி விடுவர். இதனை எழுதப்படாத விதியாக பார்க்கப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யோகி ஆதித்யநாத் வெற்றி வாகை சூடவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.