உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த நாங்கள் தயார்” என கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய சுஷில் சந்திரா, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரைதான். ஆனால், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் முடிவுசெய்யப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தும் கொண்டுவரவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திறன்கொண்ட நாங்கள், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தவும் தயாராக உள்ளோம். மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது” என்றார்.