ரஷ்யா கைப்பற்ற முயன்ற கார்கீவ், டெர்ஹாச்சி உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் நகரங்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியபோது, உக்ரைன் ராணுவம் அந்த தாக்குதலை முறியடித்து மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8-ந் தேதி கார்கீவ் நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 7வயது குழந்தை உட்பட 2பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனில் இருக்கும் நகரங்களில் கார்கீவ் நகரத்தில் தான் அதிக குண்டுவெடிப்பு சம்பவங்கள்நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.