“கிராமத்தில்தான் பதவியேற்பு விழா” – பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலின் முடிவில், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகின்றது. அங்கு மொத்தமுள்ள 117 தொகுதிகளில் தற்போது 91 தொகுதிகளில் ஆம்ஆத்மி முன்னிலையில் இருக்கின்றது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் 2-வது இடத்திலும் (19 தொகுதிகள்), அகாலி தளம் 3-வது இடத்திலும் (3 தொகுதிகள்), பாஜக 4-வது இடத்திலும் (2 தொகுதிகள்) உள்ளன.
ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், தற்போது அங்கு பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருக்கும் சரண்ஜித் சிங் 2 தொகுதிகளிலும் தோல்வி பெற்றுள்ளார். அதேபோல பஞ்சாப்பின் முன்னாள் முதலமைச்சரும் சிரோமி அகாலிதளம் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் தோல்வி அடைந்திருக்கிறார். போலவே பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து மற்றும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் தங்கள் தொகுதிகளில் தோல்வியை தழுவியிருக்கின்றனர். அகாலிதளம் சார்பில் களம் கண்ட பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோரும் தோல்வி பெற்றுள்ளனர்.
image
வெற்றி உறுதியானதை தொடர்ந்து பஞ்சாப்பில் பகத் சிங் பிறப்பு கிராமத்தில் பதவியேற்பு விழா ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மியை ஆட்சியமைக்க வைத்த மக்களுக்கு, முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஆம் ஆத்மியின் பகவந்த் மான் நன்றி தெரிவித்திருக்கிறார். பகவந்த் மான், முன்பு ஸ்டாண்ட் அப் காமெடியான இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு குறித்து பேசுகையில், “பதவியேற்பு என்று நடக்குமென்று பின் அறிவிக்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்துக்காக, முதல்வரின் புகைப்படத்தை எல்லா இடங்களிலும் வைக்க வேண்டுமென சொல்ல மாட்டோம். உண்மையில் எல்லா இடங்களிலும் இனி அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள்தான் வைக்கப்பட வேண்டும். அதையே தொண்டர்களுக்கு சொல்ல விரும்புகிறோம். இன்னும் ஒரு மாதத்தில், பஞ்சாப்பில் உண்மையான மாற்றத்தை, நீங்கள் எல்லோரும் பார்ப்பீர்கள்!” என தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “இனி புதிய இந்தியாவை நாம் படைப்போம். 75 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்சி நடந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்தி: வலுவிழந்து வரும் காங்கிரசின் வாக்கு சதவிகிதம் – என்ன காரணம்? : ஓர் அலசல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.