கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. அமெரிக்க அரசு திடீர் முடிவு..!

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி குறித்து ஆய்வு செய்து, பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா மட்டும் இதில் மௌனம் காத்து வந்தது.

இதற்கிடையில் ரஷ்யா கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி மூலம் உலக நாடுகள் விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை எளிதாகக் களைந்து உலக நாடுகள் உடனும், சர்வதேச நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியும் எனக் கணிப்புகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிகவும் முக்கியமான உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளார்.

கிரிப்டோகரன்சி-யை தடை செய்வது மேல்.. சொன்னது யார் தெரியுமா.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

 ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் அனைத்து சேவை, வர்த்தகத்திற்கும் தடை வித்துள்ளார். குறிப்பாகச் செவ்வாய்க்கிழமை ரஷ்ய கச்சா எண்ணெய், எரிவாயு மீதும் தடை விதித்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அமெரிக்கா. இந்நிலையில் புதன்கிழமை ஜோ பைடன் முக்கியமான உத்தரவை வெளியிட்டு உள்ளார்.

 கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சியை மேற்பார்வை செய்யவும், சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை உருவாக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யவும், ஆய்வு செய்யவும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்-க்கு உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபரான ஜோ பைடன்.

 டிஜிட்டல் கரன்சி
 

டிஜிட்டல் கரன்சி

ஒருபக்கம் உலக நாடுகளில் பெரும்பாலானவை சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறது, குறிப்பாக இந்தியாவில் இரு வகையான டிஜிட்டல் கரன்சி உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டில் சீனா முன்னோடியாக இருக்கும் நிலையில் அமெரிக்காவும் களத்தில் இறக்கியுள்ளது.

 பாதிப்புகள், ஆபத்துக்கள்

பாதிப்புகள், ஆபத்துக்கள்

நாளுக்கு நாள் கிரிப்டோகரன்சி மீதான முதலீடும், பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில், இதில் உள்ள பாதிப்புகளையும், ஆபத்துக்களையும் அரசின் பார்வையில் ஆய்வு செய்யவே இந்த உத்தரவு வெளியிட்டு உள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

 அமெரிக்கா சீனா

அமெரிக்கா சீனா

இந்த உத்தரவு மூலம் இந்தியாவைப் போல் அமெரிக்காவும் கிரிப்டோகரன்சி கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கி மொத்த சந்தையும் நிர்வாகம் செய்ய முடியும். ஏற்கனவே சீனா இத்துறையில் இருந்து மொத்தமாக வெளியேறியுள்ள நிலையில் அமெரிக்கா இதில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

 பிட்காயின் விலை

பிட்காயின் விலை

இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 5.40 சதவீதம் சரிந்து 39,221.86 டாலராக உள்ளது. இதேபோல் எதிரியம் 2586.38 டாலர், டெதர் 1.00 டாலர், பினான்ஸ் 376.04 டாலர், ரிப்பிள் 0.73 டாலர், டெரா 95.60 டாலர், கார்டானோ 0.82 டாலர், சோலானோ 82.52 டாலர், அவலான்சி 72.56 டாலர், டோஜ்காயின் 0.1161 டாலர், ஷிபா இனு 0.0000229 டாலராக உள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் பெரும்பாலான கிரிப்டோக்கள் சரிவில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Joe Biden ordered Fed to oversight of cryptocurrency and creation of own digital currency

Joe Biden ordered Fed to oversight of cryptocurrency and creation of own digital currency கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குக் குட் நியூஸ்.. அமெரிக்க அரசு திடீர் முடிவு..!

Story first published: Thursday, March 10, 2022, 12:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.