இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இன்றோடு இரண்டாவது நாளாக இந்திய சந்தையில் பலத்த ஏற்றத்தினை கண்டுள்ளது.
இன்று இந்தியாவில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதனையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர்.
1200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 16,350 கீழ் முடிவு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!
சர்வதேச சந்தைகள்
இதற்கிடையில் பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் அமெரிக்க சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது. இதன் எதிரொலியாக பெரும்பாலான ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. அதன் தாக்கமே இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
மார்ச் 8 நிலவரப் படி, 4818.71 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 3275.94 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 1745.59 புள்ளிகள் அதிகரித்து, 56,392.92 புள்ளிகளாகவும், நிஃப்டி 510.10 புள்ளிகள் அதிகரித்து, 16,855.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 1128.22 புள்ளிகள் அதிகரித்து, 55,775.55 புள்ளிகளாகவும், நிஃப்டி 314.20 புள்ளிகள் அதிகரித்து, 16,659.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1860 பங்குகள் ஏற்றத்திலும், 185 பங்குகள் சரிவிலும், 38 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் 3% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதுவே நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக ஏற்றம் கண்டுள்ளன. மற்ற குறியீடுகள் 2% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி &சென்செக்ஸ் குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ, மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோல் இந்தியா, ஹிண்டால் கோ, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ, மாருதி சுசுகி, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
தற்போது 10.12 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 1274.74 புள்ளிகள் அதிகரித்து, 55,922.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 365.2 புள்ளிகள் அதிகரித்து, 16,710.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: sensex trade above 1200 points, nifty trade 16,600
opening bell: sensex trade above 1200 points, nifty trade 16,600/ சென்செக்ஸ் 2வது நாளாக 1200 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி..!