சென்னையில், இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கிரீன்ஃபீல்ட் வசதியை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசால் அடையாளம் காணப்பட்ட நான்கு சாத்தியமான தளங்களை ஆய்வு செய்து வருகிறது.
மீனம்பாக்கத்தில் தற்போது உள்ள வசதிகளுடன் கூடுதலாக புதிய விமான நிலையம் நகருக்கு அருகில் செயல்படும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு’ திருப்போரூர், பாரந்தூர், பண்ணூர், படலம் ஆகிய நான்கு இடங்கள் தமிழக அரசால் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக விமானங்களின் எண்ணிக்கையும் தினசரி வருகையும் பன்மடங்கு அதிகரித்துள்ள போதிலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற பெருமைக்குரிய விமான நிலையங்கள் சென்னையில் இல்லை.
அதிகரித்து வரும் கூட்டத்திற்கு ஏற்ப தற்போதுள்ள விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் கட்டிடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் விரிவுபடுத்தி வருகிறது, ஆனால் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பது’ நீண்ட கால தாமதமாக உள்ளது.
2006 இல், சென்னைக்கு வெளியே தொழில்துறை மையமான ஸ்ரீபெரும்புதூரில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டம், அப்போதைய திமுக அரசாங்கத்தின் கூட்டணியில் இருந்த பாமகவின் எதிர்ப்பு உட்பட பல காரணிகளால் தொடங்கப்படவில்லை.2011 முதல் 2021 வரை அதிமுக அரசு இந்த விஷயத்தில் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
“இரண்டாவது விமான நிலையத்திற்கான பணியை நாங்கள் இப்போது ஆரம்பித்துள்ளோம். இரண்டாவது விமான நிலையத்திற்கு’ சென்னைக்கு அருகில் நான்கு இடங்களை தமிழ்நாடு தொழில்துறை கழகம் பரிந்துரைத்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம்’ நான்கு தளங்களை ஆய்வு செய்கிறது, இது ஆரம்ப கட்டமாகும். ஆய்வு முடிந்ததும், கலந்துரையாடலுக்குப் பிறகு’ இடத்தை அடையாளம் காணும் பணி தொடங்கும்,” என்று ஒரு அரசு அதிகாரி டெக்கன் ஹெரால்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
நான்கு இடங்களில் திருப்போரூர்’ சென்னைக்கு 44 கிமீ தொலைவில் மிக அருகில் உள்ளது, அதே சமயம் படலம் 78 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பன்னூர் சென்னையிலிருந்து 54 கி.மீ தொலைவிலும், சென்னைக்கும், பாரந்தூருக்கும் இடையிலான தூரம் 69 கி.மீ. ஆகவும் உள்ளது.
“இந்த நாட்களில் தூரம் ஒரு பிரச்சினை அல்ல. மேலும் நகருக்குள் விமான நிலையங்களை அமைக்க முடியாது. பரிந்துரைக்கப்பட்ட அனைத்து இடங்களையும் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக இரண்டு மணி நேரத்தில் கடந்து செல்லலாம். எனவே இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஆய்வு முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும், ”என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
புதிய வசதி செயல்பாட்டுக்கு வந்த பிறகும், தற்போதுள்ள விமான நிலையத்தை மூடும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று முதல் அதிகாரி மேற்கோள் காட்டினார்.
பல டெர்மினல்களைக் கொண்ட டெல்லி மாதிரியை சென்னையும் பின்பற்றும். தற்போதுள்ள விமான நிலைய டெர்மினல் கட்டிடங்களை நவீனமயமாக்க பெரும் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், அவை வணிக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்,” என்று அவர் மேலும் கூறினார். பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில், புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, பழைய விமான நிலையங்கள் மூடப்பட்டன.
சென்னையைத் தவிர, தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, மதுரை, கோவை, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் உள்ளன. பெங்களூருக்கு வெளியே அமைந்துள்ள தொழில் நகரமான ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மாநில அரசு இப்போது ஒரு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“