செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் மின்கட்டமைப்புகளை சரிசெய்ய வேண்டியுள்ளதால் ரஷ்யா உடனடியாக தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய படைகளின் தாக்குதலால் செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் மின் கட்டமைப்புகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது.
அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகளுக்கு மின்சாரம் செல்லாததால் கதிர்வீச்சு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செர்னோபில் அணு மின் நிலையத்தை ரஷ்யா தன் வசம் வைத்திருப்பதையடுத்து மின் தடை தொடர்ந்து நீடித்தால் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அதனை சரி செய்வதற்கேற்ப தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனவும் உக்ரைன் வெளியுறவுத்துறை ரஷ்யாவை கேட்டுக்கொண்டுள்ளார்.