பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆம் ஆத்மி அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்க 59 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், காலை 10.25 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 88 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் முழுவதும் உள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் வீட்டின் முன் அக்கட்சியின் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இனிப்புகளும், பாரம்பரிய பாங்கரா நடனமாட கலைஞர்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: கோவாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM