புதுச்சேரி-டிப்ளமோ படித்து, கீழ்நிலை எழுத்தர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கோர்ட் தீர்ப்பின்படி பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி அரசு துறைகளில் கீழ்நிலை எழுத்தர் (எல்.டி.சி.,) பணியிடங்களை நிரப்ப, கடந்த 2012ல் எழுத்து தேர்வு நடந்தது. இதில், 10ம் வகுப்பு முடித்து டிப்ளமோ படித்தவர்களை பிளஸ் 2 படிப்பிற்கு இணையாக கருத முடியாது என்ற காரணத்தால், தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி டிப்ளமோ முடித்தவர்களை பிளஸ் 2 படிப்புக்கு இணையாக கருதி, 9 பேருக்கு கீழ்நிலை எழுத்தர் பதவிக்கான பணி ஆணை வழங்கப் பட்டது.சட்டசபை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கீழ் நிலை எழுத்தர் பணிக்கான ஆணையை 9 பேருக்கு வழங்கினார்.பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் மற்றும் அலுவலக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புதுச்சேரி-டிப்ளமோ படித்து, கீழ்நிலை எழுத்தர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கோர்ட் தீர்ப்பின்படி பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி அரசு துறைகளில் கீழ்நிலை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.