தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இது தொடர்ந்து தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே உச்சம் தொட்டு வந்த நிலையில், இன்றோடு இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது.
இது புராபிட் காரணத்தினால் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு அமர்வில் மட்டும் தங்கம் விலையானது 10 கிராமுக்கு உச்சத்தில் இருந்து 3000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. இதே வெள்ளி விலையும் பலத்த சரிவில் காணப்படுகின்றது.
நினைத்தது நடந்தது.. வரலாற்று உச்சத்தை உடைத்த தங்கம் விலை.. சென்னையில் என்ன நிலவரம்?

என்ன காரணம்?
உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றமானது விரைவில் சுமூக நிலையை எட்டலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. முன்னதாக இரண்டு கட்டமாக நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக நிலை எட்டப்படாத நிலையில், மூன்றாவது கட்டமாக இன்று நடக்கவிருக்கும் பேச்சு வார்த்தையில் சுமூக நிலை எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

உச்சம் விலை
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் நடப்பு வாரத்தில் அதிகபட்சமாக 2078. 80 டாலர்களை தொட்டிருந்த நிலையில், நேற்று 1981 டாலர்கள் வரையில் சரிவினைக் கண்டது. இன்று அதனையும் உடைத்து 1975.65 டாலர்கள் வரையில் சென்று, தற்போது சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது. ஆக உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 100 டாலர்களுக்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது.

ரூ.3000-க்கு மேல் சரிவு
இதே இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு கடந்த செவ்வாய்கிழமையன்று 55,558 ரூபாயாக உச்சம் தொட்டது. இதே இன்று 52,473 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 3,000 ரூபாயாக மேலாக சரிவினைக் கண்டும் காணப்படுகின்றது. இந்த சரிவானது இன்னும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது இன்று நடக்கவிருக்கும் ரஷ்யா – உக்ரைன் கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டால் இன்னும் பலத்த வீழ்ச்சியினை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தைகள் ஏற்றம்
இன்று பல்வேறு சர்வதேச சந்தைகளும் பலமான ஏற்றத்தினையே கண்டு வருகின்றன. இது தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சரிவில் காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் இருந்து முதலீடுகள் வெளியேறலாம். புதிய முதலீடுகளும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் விலை சரிவு
முந்தைய அமர்வில் கச்சா எண்ணெய் விலையானது 12% அதிகமாக சரிந்திருந்த நிலையில், சவுதி அரேபியா எரிபொருள் விலையை குறைக்கும் விதமாக உற்பத்தியினை உயர்த்துவதை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது கச்சா எண்ணெய் விலை குறைய காரணமாக அமைந்துள்ள நிலையில், இது பணவீக்கம் குறையவும் வழிவகுக்கலாம்.

பத்திர சந்தை ஏற்றம்
ஃபெடரல் ரிசர்வ் வங்கி மார்ச் 16 அன்று முக்கிய முடிவுகளை வெளியிடவுள்ள நிலையில், பத்திர சந்தையானது ஏற்றத்தில் காணப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்தது. இதன் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.

எண்ணெய் விலை Vs பணவீக்கம் Vs தங்கம்
எண்ணெய் விலை குறைந்து வரும் அதே நேரம், இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர உதவிகரமாக இருக்கும். இது பாதுகாப்பு புகலிடம் சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் மார்ச் 15 மற்றும் மார்ச் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் முக்கிய முடிவுகள் மார்ச் 16 அன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகளாவது வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்றும் 2வது நாளாக சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.70 டாலர்கள் குறைந்து, 1986.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 125 ரூபாய் குறைந்து, 69,450 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது.ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 4910 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 880 ரூபாய் குறை 39,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 121 ரூபாய் குறைந்து, 5356 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 968 ரூபாய் குறைந்து, 42,848 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 2.60 ரூபாய் குறைந்து, 74.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 741 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 2600 குறைந்து, 74,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இது சரிவினைக் கண்டுள்ளது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. இதே நீண்டகால நோக்கிலும் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on march 10th 2022: gold prices today fall further, down Rs.3000 from recent high
gold price on march 10th 2022: gold prices today fall further, down Rs.3000 from recent high/ தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.3000 சரிவு.. தொடரும் வீழ்ச்சி.. இனி எவ்வளவு குறையலாம்..!