உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடு இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு சதி செய்து சீர் குலைப்பதாயின் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரை அழைத்து கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
பேச்சு சுதந்திரம் மற்றும் செய்திகளை வெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்துவது தொடர்பில் கவலை தெரிவிப்பதாகவும் இவை தொடர்பில் அறிக்கை ஒன்றை கோருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
“குறிப்பிட்ட செய்தி தொடர்பில் கவலையடைகின்றேன். இவ்வாறான செய்திகளை கடந்த காலங்களில் வெளியிட்டு பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வேலைத்திட்டம், ஜனநாயகத்தின் தவறாக வேலைத்திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கவலையடைகின்றேன்.
பேச்சு சுதந்திரம் ,செய்திகளை வெளியிடும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி செயற்படுதல் தொடர்பிலும் அறிக்கை ஒன்றை கோரி சிறப்புரிமை குழுவுக்கு அதனை சமர்ப்பித்து மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை குறித்து உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
பசும்பால் தொடர்பில் வெளியான பத்திரிகை செய்தி குறித்து இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.