'தாயும் மகனும் நிம்மதியாக தூங்குவர்!'- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 9-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘30 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளனுக்கு ஜாமீன்… தாமதம் செய்வதை எப்படி ஏற்பது எனக் கேட்ட உச்சநீதிமன்றம்! தாமதத்திற்கு யார் காரணம்?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Arun R_S
அவரை சுற்றி நடந்த அரசியல்தான் காரணம். அது இந்திய அரசியலும் இருக்கலாம், சர்வதேச அரசியலாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சட்டம் என்ன சொல்கிறதோ அதுபடி தான் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்
கவர்னர் போஸ்ட்
MP போஸ்ட்க்கு
ஆசைப்படாத
நீதிபதியோ
நீதி வெல்லட்டும்
BabuMohamed
“அரசியல்வாதிங்கதான்…! “
Advice Avvaiyar
அவங்க காரணம், இவங்க  என்று சொல்லிச் சொல்லியே காலங்களைக் கடத்தி விட்டனர். கொலை செய்தவர்களே, நிரூபிக்காததால் வெளியில் வந்து விடும்போது ,இவர்களுக்கு ஏன் இத்தனை வருடங்கள் கடந்து போனது? நினைத்திருந்தால் என்றோ விட்டிருக்கலாம். தாயும்,மகனும் ஓரளவு நிம்மதியாக தூங்குவர்.இப்ப இது போதும்.
image
தமிழாசிரியர் சிபி
எல்லோருடைய அலட்சியமும்தான் காரணம். இதை தொடங்கியவரே 8 முறை அனுப்பி ஆஜராகவில்லை.
ajayprasad.j
Politics dhaan kaaranamSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.