தியேட்டருக்குள் புகுந்த பாமக; தெறித்து ஓடிய சூர்யா ரசிகர்கள்!

தமிழில் ஞானவேல் இயக்கத்தில்
சூர்யா
நடித்து, கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்த படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக
பாமக
திடீரென எதிர்ப்பு தெரிவித்தது.

என்னை கைது செய்தவர் இங்கே இருக்கிறார்; நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்!

இதையடுத்து படத்தில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதே சமயம், எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் ஜெய் பீம் படம் எடுக்கப்படவில்லை என சூர்யா விளக்கம் கொடுத்திருந்தார். அதை ஏற்க மறுத்த பாமகவினர் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வந்தனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி கலைப்பு?; புதிய வெடியை கொளுத்தும் பா.ஜ.க!

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள
எதற்கும் துணிந்தவன்
படம் திரைக்கு வந்துள்ளது. முன்னதாக கடலூரில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை வெளியிடக் கூடாது என பாமக சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். குறிப்பாக வன்னியர் மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை அவரது படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

சசிகலாவை வரவேற்கும் அதிமுக; அரண்டுபோன ஓபிஎஸ், எடப்பாடி!

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தனியார் தியேட்டருக்குள் பாமக செஞ்சி நகர செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் 30க்கு மேற்பட்டோர் அதிரடியாக சென்றனர்.

திருமாவளவன் ஷாக் தகவல்; பீதியில் உறைந்த தமிழக அரசு!

பின்னர், நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று திரையரங்க நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதை பார்த்த சினிமா ரசிகர்கள் ஏதோ பிரச்சனைக்கு வந்துள்ளார்களோ என நினைத்து அங்கிருந்து தெறித்து ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியிட எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து திரையரங்கத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செஞ்சி துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார் திரையரங்கு வளாகத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.