திராவிட திருமணங்கள்… நாடாளுமன்றத்தில் சட்டம்… தி.மு.க எம்.பி-களுக்கு ஸ்டாலின் உத்தரவு

சுயமரியாதை திருமணங்களான திராவிட திருமணங்களை நாடுமுழுவதும் சட்டப்பூர்வமாக்க நடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் மகள் நித்திலாவுக்கும் திமுக ஐ.டி. விக் இணை செயலாளர் டக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் சென்னையில் புதன்கிழமை சுயமரியாதை திருமண முறையில் திருமணம் நடபெற்றது. இந்த திருமண விழாவில், திமுக தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், மு.க.அழகிரி உள்ளிட்ட அரசியல் விஐபிகள் பலரும் கலந்துகொண்டனர்.

திராவிட இயக்க குடும்பத்தைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி மகள் நித்திலா, மற்றும் திமுக ஐடி விங் இணை செயலாளர் மகன் கீர்த்தன் திருமணம் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என திமுக எம்.பி.க்களுக்கு கூறியுள்ளார்.

மேலும், இது போன்ற சுயமரியாதை முறையிலான திருமணங்களை இனி திராவிடத் திருமணங்கள் என்று அழைக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதற்கு அரசாங்கம் திராவிட மாடலை பின்பற்றுவதே காரணம் என்று கூறினார்.

“அண்ணா 1967ம ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க சட்டம் கொண்டுவந்தார். சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தீர்மானம் அது. அந்த தீர்மானம் மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சுயமரியாதைத் திருமணங்களை திராவிட திருமணங்கள் என அழைக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுயமரியாதை திருமணங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் செயல்படுத்த குரல் எழுப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார். தமிழகத்தில் உள்ளது போல் சுயமரியாதை திருமணங்களை நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திமுக எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் திருமணத்தில் கலந்துகொண்டு சுயமரியாதை திருமணங்களை நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக்க நாடளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் திமுக எம்.பி.க்கள் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், சுயமரியாதை திருமணங்கள் தொடர்பாக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.