புதுடெல்லி:
தென் கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சிக்கும், மக்கள் சக்தி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் நடைபெற்றது. இதில் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் 48.59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தென் கொரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட யூன் சுக்-யோலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தென்கொரிய தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்ட யூன் சுக்-யோலை மனதார வாழ்த்துகிறேன். இந்தியா-கொரிய குடியரசின் சிறப்பு வியூகக் கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்தது தேர்தல் ஆணையம்