உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்தது. டிவி சேனல்களில் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடையே அறிமுகமாகிய பக்வந்த் மான், 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்க இருப்பதாகத் தெரிகிறது. மேலும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தேர்தலில் பா.ஜ.கவினர் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் இது குறித்துத் தெரிவித்திருப்பதாவது,“பஞ்சாப் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்க மாட்டேன். பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர்காலனில் பதவியேற்பேன். அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் புகைப்படங்கள் இடம் பெறாது. அதற்குப் பதிலாக அம்பேத்கர், பகத் சிங்கின் படங்கள் இடம் பெறும்” எனத் தெரிவித்திருக்கிறார்.