புதுச்சேரி-காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய கட்டடம் 65 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. நிறுவன இயக்குநர் செல்வராஜ் வரவேற்றார்.அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு ரூ.65 லட்சம் செலவில் கல்லுாரியின் பிரதான கட்டடத்தை புதுப்பிக்கும் பணி, ரூ.10 லட்சம் செலவில் போர்வெல் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மத்திய ஆயுஷ் அமைச்சக பங்களிப்புடன் 5 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.கல்லுாரி வளாகத்தில் நடந்த உலக மகளிர் தின விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். முனைவர் கோச்சடை நன்றி கூறினார்.
Advertisement