பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவர் 2 மாதத்தில் மரணம் குறித்து மருத்துவர்கள் விளக்கம்

மேரிலாந்து, அமெரிக்கா

லகில் முதல் முறையாகப் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவர் 2 மாதத்தில் மரணம் அடைந்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் உள்ள மேரிலாந்து நகரைச் சேர்ந்த டேவிட் பென்னெட் என்பவர் இதயம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவரது இதயம் தொடர்ந்து செயலிழந்து வந்தது.  எனவே அவருக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.    ஆனால் அவருக்கு மாற்று இதயம் கிடைக்கவில்லை.

உடனடியாக இதயம் பொருத்த வேண்டிய நிலையில் இருந்த பென்னட்டுக்கு வேறு வழி இல்லாமல் மருத்துவர்கள் ஒரு விலங்கின் இதயத்தைப் பொருத்த முடிவு செய்தனர்.   இது குறித்து நடந்த பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு அவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த அமெரிக்கச் சுகாதாரத்துறையின் ஒப்புதல் மேரிலாந்து மருத்துவர்களால் பெறப்பட்டது.

பன்றியின் இதயத்தை மனிதர்களுக்குப் பொருந்தும்படி மரபணு மாற்றப்பட்டு பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.  இது சோதனி முயற்சி எனவும் இது தோல்வியை அடையவும் வாய்ப்புள்ளதாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்ற பி|றகு பன்றியின் இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.   மனிதருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது மருத்துவ உலகில் முதல் முறையாகும்.

இதயம் மாற்றப்பட்ட பிறகு பென்னட் நல்ல உடல் நலத்துடன் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.   சுமார் 2 மாதம் பன்றியின் இதயத்துடன் மருத்துவக் கண்காணிப்பில் வாழ்ந்த டேவிட் பென்னட் நேற்று உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்    ஏற்கனவே பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் நலமாக இருக்கையில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவர் உயிர் இழந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து மேரிலாந்து மருத்துவர்கள்,

“டேவிட் பென்ண்ட் உடலில் பன்றியின் இதயம் நன்கு வேலை செய்து வந்தது.  அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.   இருப்பினும் அவர் மரணம் அடைந்துள்ளது மருத்துவ உலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.  அவரது மரணத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது”

என அறிவித்துள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.