ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகள் விதித்தாலும், ரஷ்ய கொள்கலன் கப்பல்கள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தங்குதடையின்றி எரிவாயு கொண்டு சென்ற வண்ணம் உள்ளன்.
ஐரோப்பிய நாடுகளின் 40 சதவீத எரிவாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது.
ரஷ்யா மீது தொடுக்கப்பட்ட தடைகளுக்கு பதிலடி தரும் விதமாக, அதிபர் புடின் எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தபோதும், உக்ரைன் போரால் ரஷ்ய பொருளாதாரம் கடுமையாக சரிந்ததால், வருவாயை பெருக்க ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய்கள் மற்றும் கப்பல்கள் மூலம் ராஷ்யா தொடர்ந்து எரிவாயு ஏற்றுமதி செய்து வருகிறது.