பாஜக அலையில் இருந்து தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ள முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதில், 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
இதனிடையே இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளதாவது, நாடு முழுவதும் பாஜக அலை அடிக்கிறது. அதில் தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ள முடியாது. முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்ததால் முஸ்லீம் பெண்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.