திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த கொண்ட மிட்டாவை சேர்ந்தவர் 32 வயது மாற்றுத்திறனாளி பெண். இவர் திசா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு பிறவியிலேயே ஒரு கண் தெரியாது.சித்தூர் அடுத்த விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரா (வயது 42) என்பவர் எனக்கு கடந்த 1 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த ஜெயச்சந்திரா என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார். இன்ஸ்பெக்டர் முரளி மோகன் வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனை தேடி வந்தனர்.
ஜெட்டிங் கொட்டாய் கிராமத்தில் பதுங்கி இருந்த ஜெயச்சந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்:-
பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் மாற்றுத்தினாளி பெண் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஜெயச்சந்திரா பாலியல் பலாத்காரம் செய்ததாக பரிசோதனை முடிவு வந்தால் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.