பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலைப் பெற்று வந்தது. தற்போது 91 இடங்கள் பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பிரபலமான நபர்களையெல்லாம் வீழ்த்தியுள்ளனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன் பிரபல நடிகர் சோனு சூட்டின் தங்கை மாளவிகா சூட் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் மோகா தொகுதியில் களம் இறங்கினார்.
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் டாக்டர் அமந்தீப் கவுர் ஆரோரா, பா.ஜனதா சார்பில் டாக்டர் ஹர்ஜோத் கமல், சிரோமன்மணி அகாலி தளம் கட்சி சார்பில் பர்ஜிந்தர் சிங் மஹான் பிரர் ஆகியோர் களம் இறங்கியிருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மாளவியா சூட் பின்தங்கியே வந்தார். 16 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மாளவியா சூட் 38,125 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஆம் ஆத்மி வேட்பாளர் அமந்தீப் கவுர் ஆரோரா 58,813 வாக்குகள் பெற்று சுமார் 20,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள்… பஞ்சாப் மாநிலத்தில் கணிப்புகளை மிஞ்சிய வெற்றி- காங்கிரஸ் செய்த தவறால் இமாலய சக்தியாக மாறிய ஆம் ஆத்மி