புதுச்சேரி-புதுச்சேரியில் வரும் 12ம் தேதி, தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் -செயலர், மாவட்ட நீதிபதி சோபனாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா வழிகாட்டுதல்படி, வரும் 12ம் தேதி, தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி, ஏனாம் நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.தேசிய மக்கள் நீதிமன்றத்தில், சமாதானமாக கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன்- மனைவி பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். ,மேலும், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது.இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளும் சுமார் 3553 எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா, தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைக்கிறார். புதுச்சேரி மாவட்ட நீதிபதி சோபனாதேவி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர் புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement