புதுச்சேரியை அடுத்த கீழ்புத்துபட்டு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவன் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையை சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் ராகேஷ். இவர், பணி நிமித்தமாக அவரது காரில் தனது நண்பருடன் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியை அடுத்த கீழ்புத்துபட்டு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த திமுக எம்.பி.என்.ஆர் இளங்கோ மகன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார் அவருடன் பயணித்த நண்பர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ராகேஷ் உடல் காரினுள் மாட்டிக் கொண்டதால் சுமார் ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். இதைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM