புதுச்சேரி-புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் உள்ள, ஆனந்த ரங்கப்பிள்ளை நுாலகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.இதனையொட்டி புத்தகக் கண்காட்சி துவக்க விழா நேற்றுமுன்தினம் நடந்தது. நுாலகர் விஜயகுமார் வரவேற்றார். பதிவாளர் அமரேஷ் சமந்தராயா,நிதி அதிகாரி லசார், தேர்வாணையர் சதானந் ஜி.சாமி வாழ்த்தி பேசினர்.துணைவேந்தர் குர்மீத் சிங் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்துபேசும்போது, ‘அறிவார்ந்த பெண்களால் ஆற்றல்மிகு இந்தியாவை உருவாக்க முடியும். பெண்களுக்கான சம உரிமை ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் துவங்க வேண்டும். அதுவே மகளிருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன். குடும்பத்தில் பெண்களை மதித்து, பாராட்டும் போது அன்பு வெளிப்படுகிறது. அன்பினால் எதையும் நம்மால் வெல்ல முடியும்’ என குறிப்பிட்டார்.வரும் 12ம் தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியை பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையிடலாம்.நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அதிகாரிகள், புல முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement