பொதுவாக முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களது வயதினை அதிகரித்து காட்டும்.
இதனால் நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்களை வயதானவர்களாக காட்டும். மேலும் உங்களது தோற்றத்தையே அது வேறுபடுத்திக் காட்டும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுத்து நிறுத்த ஒரு சில எளிய வழிகள் உள்ளது. தற்போது அவை என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
- முகம் சுருக்கம் நீங்க ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும் 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, முகத்தில் தோன்றும் மேடு பள்ளங்கள் மற்றும் முகம் சுருக்கம் நீங்க ஆரம்பிக்கும்.
- தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.
- ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும்.
இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.
- முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து கொள்ளவும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்பு முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும், பின்பு முகத்தை கழுவ சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும்.
- ஆப்பிள் சீடர் வினிகர் சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவும் மேம்படும்.
- வெள்ளரிக்காயை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.
- முகத்தில் மேடு பள்ளங்களுடன், கரும்புள்ளிகளும் இருந்தால், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் விரைவில் மறையும்.