யூடியூப் வீடியோவில் தன்னைப்பற்றி அவதூரகவும் உண்மைக்கு புறம்பாகவும் பேசிய தடா ரஹீம் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்று கூறி ஜீவஜோதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாட்டம் மேற்கு விரிவாக்கம் எல்.ஐ.சி.காலணியை சேர்ந்த தண்டபாணி என்பரின் மனைவி ஜீவஜோதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில்,
என்னுடைய கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கடத்திச்சென்று கொடைக்கானலில் வைத்து கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட வழ்க்கில் தமிழக காவல்துறையினர் துரிதமாக செயல்ட்டு குற்றவாளியா சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்க்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
தற்போது எனக்கும் வேதாரண்யத்தை சேர்த்த தண்டபாணி என்பவருடன் திருமணம் நடைபெற்று இருவரும் மகனுடன் வசித்து வருகிறோம். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலில், ராஜகோபால் ஜீவாஜோதி வழக்கில் நடந்த உண்மை இதுதான் என்று தடா ரஹீம் என்பவரிடம் நேர்காணல் செய்து அந்த வீடியோ கடந்த பிப்ரவரி 18-ந் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு சிறிதளவும் சம்மந்தமே இல்லாத தடா ரஹீம், ராஜகோபால் சிறையில் இருந்தபோது அவருடன் இருந்த ஒரு காரணத்திற்காக என்னைப்பற்றி அவதூராக பேசியுள்ளார்.
தற்போது 3 லட்சம் பேர் பார்த்துள்ள இந்த வீடியோவில், நான் ராஜாகோபாலை ஏமாற்றிவிட்டு பிரான்சிஸ் சாந்தகுமாரை திருமணம் செய்துகொண்டதாக உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை அவர் கூறியுள்ளார். மேலும் என்னைப்பற்றி ஆபாசமாகவும் கமெண்ட் செய்துள்ள இந்த வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட யூடியூப் நெறியாளர் தடா ரஹீம் மற்றும் சேனல் உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்