உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றது. உக்ரைனுக்கு தங்களது ஆதரவினை காட்டும் விதமாக ரஷ்யாவுடனான வணிக உறவுகளையே முறித்துக் கொண்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது மெக்டொனால்ட், பெப்சிகோ, கோகோ கோலா மற்றும் ஸ்டார் பக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், ரஷ்யாவில் தங்களது விற்பனையை நிறுத்தியுள்ளன.
சர்வதேச அளவில் மிகப் பிரபலமான உணவு சங்கிலி நிறுவனங்களான, இவை எடுத்த முடிவானது, லாபத்தினை கருத்தில் கொள்ளாது எடுக்கப்பட்டுள்ளது.
நினைத்தது நடந்தது.. வரலாற்று உச்சத்தை உடைத்த தங்கம் விலை.. சென்னையில் என்ன நிலவரம்?
4 நிறுவனங்கள் விற்பனைக்கு தடை
பெப்சி மற்றும் மெக் டொனால்டு உள்ளிட்ட நிறுவனங்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் யூனியனுடனும் இணைந்து பணியாற்றி வந்தன. இது ரஷ்யா – சர்வதேச அளவிலான உறவுகளை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. தற்போது விற்பனையை தடை செய்துள்ள இந்த 4 நிறுவனங்களுமே ரஷ்யாவில் பெருமளவில் சேவை செய்து வரும் உணவு சங்கிலி நிறுவனங்களாகும்.
மெக்டொனால்டு
ரஷ்யாவில் 847 உணவகங்களை மூடியதால், அதனால் பாதிக்கப்பட்டுள்ள 62,000 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக மெக்டொனால்டு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் 1990ம் ஆண்டில் முதலாவதாக மாஸ்கோவில் தொடங்கப்பட்டது. இது சோவியத் யூனியன் வீழ்ச்சி கண்டவுடன், அமெரிக்காவின் அடையாள சின்னமாக மாறியது.
ஸ்டார்பக்ஸ் & பெப்சிகோ
ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நூற்றுக் கணக்கான கடைகளை தற்காலிகமாக ரஷ்யாவில் மூடுவதாக அறிவித்துள்ளது. இதே பெப்சிகோ நிறுவனம் அதன் விளம்பரங்களையும், பானங்களையும் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்தும் என அறிவித்துள்ளது. எனினும் குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்யும் என தெரிவித்துள்ளது.
கோகோ கோலா
இதே கோகோ கோலா நிறுவனம் 1980ம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற ஓலிம்பிக் போட்டிகளின் அதிகாரப்பூர்வ பானமாகவும் இருந்தது. இது மட்டும் அல்ல இன்னும் ஏராளமான நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது வணிகத்தினை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. குறிப்பாக அமேசான் நிறுவனம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் அதன் கிளவுட் சேவைகளுக்கு வாடிக்கையாளர்களை ஏற்றுக் கொள்வதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
பாதிப்பு
ரஷ்யாவின் பல்வேறு வணிகத்தினை தடை செய்து வரும் நிறுவனங்களால். பல லட்சம் பேர் வேலையிழக்கும் நிலை ஏற்படலாம். இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையலாம். இது தேவையை குறைக்கும். நுகர்வினை குறைக்க வழிவக்கும். மொத்தத்தில் ரஷ்யா மெதுமெதுவாக சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது மட்டும் தெளிவாகிறது.
russia – ukraine crisis: No income from Russia, McDonald’s, PepsiCo, Coca-Cola, Starbucks halt sales in Russia,
russia – ukraine crisis: No income from Russia, McDonald’s, PepsiCo, Coca-Cola, Starbucks halt sales in Russia,/ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் வருமானமே வேண்டாம்.. உணவு நிறுவனங்கள் அதிரடி முடிவு..!