ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை விதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தடைகள், பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ரஷ்யாவின் நிதி நிலையில் பெரும் சரிவினை உண்டாக்கலாம். ரூபிளின் மதிப்பினை சரிய வைப்பது, கடன் மதிப்பினை குறைப்பது, மொத்தத்தில் ரஷ்யாவின் பொருளாதாரத்தினை மந்த நிலைக்குள் தள்ளுவது என பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
மொத்தத்தில் ரஷ்யா முன்பை போல பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரஷ்யா இதை கட்டாயம் செய்யாது.. குண்டை போட்ட பின்ச்..!
ஏரளமான பிரச்சனைகள்
செமி கண்டக்டர் மீதான கட்டுப்பாடுகள் தொழிற்துறை மற்றும் இறக்குமதி மீது மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அதேபோல பெரு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீதான கட்டுப்பாடுகள், ரஷ்யாவினை நீண்டகாலத்திற்கு தனிமைப்படுத்தலாம். இது ரஷ்யாவின் பொருளாதாரத்தினை இன்னும் தேக்கமடைய செய்யலாம். மேலும் இப்படி நெருக்கடியான நிலைக்கு மத்தியில் கடன் வழங்குனர்களை ரூபிளில் வசூலிக்க நினைக்கலாம். இது ரஷ்ய நிறுவனங்களுக்கு மேலும் பிரச்சனையாய் அமையலாம்.
இயற்கை எரிவாயுவுக்கும் தடை
குறிப்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் பலவும், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன. இது ரஷ்யாவின் உயிர் நாடி என்றே கூறலாம். சொல்லப்போனால் ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்குய பங்கு வகிப்பது கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் ஏற்றுமதி தான். சில தினங்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் இறக்குமதி தடை விதித்தன. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இயற்கை எரிவாயும் இறக்குமதிக்கும் தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக தெரிகின்றது.
மோசமான பாதிப்பு ஏற்படலாம்
அப்படி ஒரு வேளை கேஸ்-க்கும் தடை விதிக்கப்பட்டால் சோவியத் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தனிமைப்படுத்தப்படும். இது ரஷ்ய மக்களின் வாழ்வாதாரத்தினையும் பெரிதும் பாதிக்கும். மொத்தத்தில் சங்கிலித் தொடராக ஒவ்வொன்றாக பாதிக்கும். குறிப்பாக தேவை குறையும். மக்களின் நுகர்வும் குறையும். மொத்தத்தில் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியினை காணலாம்.
இன்னும் தடைகள் அதிகரிக்கலாம்
அமெரிக்கா, ஐரோப்பாவின் தடைகள் இத்துடன் நின்ற பாடாக இல்லை. இது இன்னும் நீடிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஏனெனில் ரஷ்யா இத்துடன் தாக்குதலை நிறுத்துவதாகவும் தெரியவில்லை. புதன் கிழமையன்று ஒரு மருத்துவமனை மீது குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் கூட அரங்கேறின. முன்னதாக அரசாங்க அலுவலகங்கள், கட்டிடங்கள், ராணுவ தளவாடங்கள் போன்ற பல முக்கிய இடங்களில் தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் ரஷ்யாவின் மீதான தாக்குதல் மேற்கோண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.
பங்கு சந்தைகளில் தாக்கம் இருக்கலாம்
தற்போது நிறுவனம், எண்ணெய் , கேஸ், பொருளாதார தடை என்பதையும் தாண்டி தனி நபர் மீதும், குறிப்பாக புடினுக்கு நெருக்கமானவர்களுக்கும் பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில் ஏற்கனவே ரஷ்யாவின் வெளிச் சந்தைகள் ஏற்கனவே ஒரளவுக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் எக்ஸ்சேஞ்ச்களிலும் முடக்கம் இருக்கலாம். இதுவும் சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
முதலீடுகள் வெளியேறலாம்
ரஷ்யாவின் இந்த சரிவினை பயன்படுத்தி சீனா போன்ற நாடுகள், மிக குறைந்த விலையில் ரஷ்யா சொத்துகளை வாங்கி வைக்கலாம். அவற்றை இன்னும் பல ஆண்டுகள் வைத்திருக்கும்போது நல்ல லாபம் கிடைக்கலாம். இதனால் ரஷ்ய நிறுவனங்களுக்கு பலன் இருக்காது. அதே நேரத்தில் பல மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறலாம். இது நிறுவனங்கள் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படலாம்.
what’s left to sanctions in Russia? wallets, stocks and FII
what’s left to sanctions in Russia? wallets, stocks and FII/ரஷ்யாவுக்கு இத்தனை நெருக்கடிகளா? இனி என்ன தான் மிச்சம் இருக்கு.. காத்திருக்கும் பிரச்சனைகள்!