உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான போர் தொடர்ந்து அதிகப்படியான பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி வரும் நிலையில், அமெரிக்காவும், பிரிட்டனும் ரஷ்யா கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது தடை விதித்தது புதின் அரசுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது.
மேலும் உலக நாடுகளின் பல்வேறு தடைகள் காரணமாக ரஷ்யாவில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீனா மற்றும் இதர நட்பு நாடுகள் மூலம் சரி செய்யப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவுக்குப் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
உக்ரைன் நெருக்கடி.. இந்தியா ஐடி துறைக்கு சாதகம் தான்.. எப்படி.. ஏன்..!
ரஷ்யா
ரஷ்யா பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய பிரச்சனைகள் மத்தியில் சிக்கியிருக்கும் நிலையில் சர்வதேச அமைப்புகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன், பத்திர முதலீட்டுக்கான பணத்தைச் செலுத்த முடியாமல் திவாலாக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகக் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான பின்ச் தெரிவித்துள்ளது.
கிரெடிட் ரேட்டிங்
பொதுவாக ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் வங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத போது திவாலாக அறிவிக்கப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுச் சொத்துக்கள் பரிமுதல் செய்யப்படும். ஆனால் இதையே ஒரு நாடு செய்தால் என்னாகும், அது தான் தற்போது ரஷ்யாவுக்கு நடக்க உள்ளதாகக் கிரெடிட் ரேட்டிங் அமைப்பான பின்ச் தெரிவித்துள்ளது.
1998 ரஷ்யா திவால்
இதில் ரஷ்யாவுக்குக் கடன் வழங்கிய அமைப்பாக ஐஎம்எப், உலக வங்கி கூட இருக்கலாம், இதேபோல் பத்திரத்திற்கான பேமெண்ட் செலுத்தா போது ரஷ்யாவுக்கு Partial என ரேட்டிங் பெறும். இதேபோல் தான் 1998ஆம் ஆண்டின் ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கடனை செலுத்த முடியாமல் தவித்துத் திவாலானது.
ரஷ்யா பேமெண்ட்
மேலும் கிரேடிட் டேட்டிங் அமைப்பு ரஷ்யா பேமெண்ட்-ஐ செலுத்தாமல் 30 நாட்களுக்கு அதிகமாகக் காலம் கடத்தினால் டேட்டிங் குறைப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும். இந்நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி ரஷ்யா பத்திரத்திற்கான 2 பில்லியன் பேமெண்ட் செலுத்த வேண்டும்.
லண்டன் பங்குச்சந்தை
இந்தக் கடன் லண்டன் பங்குச்சந்தையில் அமெரிக்க டாலரில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஃபிட்ச், எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் மற்றும் மூடிஸ் உள்ளிட்ட கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள், உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகளால் கடன்கள் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படாமல் போகலாம் என்று நம்புகின்றன.
ரஷ்யா திட்டம்
ரஷ்ய அரசால் கடனை திருப்பிச் செலுத்த முடியும், ஆனால் மேற்கத்திய நிதித் தடைகளுக்குப் பதிலளிப்பதற்காக அவ்வாறு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
யாருக்குப் பிரச்சனை
இதனால் கடன் கொடுத்தவர்களுக்குத் தான் பிரச்சனை, காரணம் ஏற்கனவே உலக நாடுகள் ரஷ்யா மீதான முதலீட்டுக்குக் கடுமையான தடை விதித்துள்ளது, வெளிநாட்டில் இருக்கும் அரசு சொத்துக்களை முடக்கியுள்ளது. இதன் மூலம் கடன் கொடுத்த முதலீட்டாளர்கள் மற்றும் நிதியமைப்புகளுக்குத் தான் பாதிப்பு.
Russia may debt default like 1998; What will happen?
Russia may debt default like 1998; What will happen? ரஷ்யா இதை கட்டாயம் செய்யாது.. குண்டை போட்ட பின்ச்..!