டோக்கியோ: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஜப்பானை சேர்ந்த பிளேஸ்டேஷன் மற்றும் நிண்டெண்டோ ஆகிய நிறுவனங்கள் தங்களின் பொருட்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியாக பல்வேறு நாடுகளை தொடர்ந்து, பெரிய நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது.