ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கியில் இன்று நேருக்கு நேர் சந்தித்துப் பேச உள்ளனர்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை துருக்கியில் உள்ள அன்டாலியா நகரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர், ரஷ்ய மற்றும் உக்ரேன் இடையே நடக்கும் முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும். இந்தப் பேச்சுவார்த்தை மிக முக்கியமான ஒன்று என ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.