ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
ரஷ்ய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு உதவியாக உக்ரைனுக்கு ஸ்டார்ஸ்ட்ரீக் அதிவேக போர்ட்டபிள் ஏவுகணைகள் (Starstreak high-velocity portable missiles) ஒப்படைக்கப்படும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் நேற்று இரவு நாடளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் இந்த வகை ஏவுகணை ஒவ்வொன்றும் மூன்று ஈட்டிகளாகப் பிரிந்து போர்க்கப்பல்கள் அல்லது போர் விமானங்களை துளைத்து பின்னர் வெடித்துச் சிதறும் வகையில் உருவாக்கப்பட்டவை.
பெல்ஃபாஸ்ட்-தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் தோளில் தாங்கி பயன்படுத்தப்படக்கலாம் அல்லது வாகனத்துடன் இணைத்து பயன்படுத்தலாம்.
இது குறித்து பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறுகையில் “இந்த ஆயுத அமைப்பு தற்காப்பு ஆயுதங்களின் வரையறைக்குள் இருக்கும், ஆனால் உக்ரேனியப் படைகள் தங்கள் வான்பரப்பை சிறப்பாகப் பாதுகாக்க அனுமதிக்கும்” என்றார்.
ஏற்கெனவே 3,615 NLAW டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் உக்ரேனியர்களுக்கு வழங்கப்பட்டதை உறுதி செய்த வாலஸ், மேலும் Javelin anti-tank missiles வழங்கப்படும் என்றும் கூறினார்.