உக்ரைனில் No Fly Zone அறிவிக்குமாறு ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மீண்டும் நெட்டோவோடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர் தொடங்கும் வரை பொறுமையாக காத்திருந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைனால் மட்டும் தனித்து நின்று நிறுத்தமுடியாது, அதற்கு நேட்டோ நாடுகளின் உதவி வேண்டும் வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார். மேற்குலகம் முன்வந்து உக்ரைன் வான்பரப்பில் No Fly Zone சாத்தியம் என்று அவர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
மாறாக, மூன்றாம் உலகப்போர் வரும்வரை நேட்டோ அமைதி காத்தால், அதற்குள் ரஷ்ய படை லட்சக்கணக்கான மக்களை கொன்றுவிடுவார்கள் என எச்சரித்தார்.
நேற்று உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய படை நேரடி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர்.
இந்த தாக்குதலில், அந்த நேரத்தில் பிரசவ வலியில் இருந்த பெண்கள் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்கப்பட்ட மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை உக்ரைன் ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
Mariupol. Direct strike of Russian troops at the maternity hospital. People, children are under the wreckage. Atrocity! How much longer will the world be an accomplice ignoring terror? Close the sky right now! Stop the killings! You have power but you seem to be losing humanity. pic.twitter.com/FoaNdbKH5k
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 9, 2022