பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரியான் கூக்லரை (Ryan Coogler), வங்கி கொள்ளையன் என நினைத்து போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த காணொளி வெளியாகி உள்ளது.
கருப்பினத்தவரான ரியான் கூக்லர், ஜனவரி மாதம், அட்லாண்டா நகரில் உள்ள அமெரிக்க வங்கிக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கிருந்த பெண் காசாளரிடம் 12,000 டாலர் பணம் எடுப்பதற்கான படிவத்தை அளித்த கூக்லர், பணத்தை தனி இடத்தில் வைத்து எண்ண வேண்டும் எனப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்திருந்த கூக்லர், வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக சந்தேகமடைந்த பெண் காசாளர், மேலாளருக்கு தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் அவரது கைகளுக்கு விளங்கிட்டு அழைத்து சென்றனர்.