வலுவிழந்து வரும் காங்கிரசின் வாக்கு சதவிகிதம் – என்ன காரணம்? : ஓர் அலசல்

சுதந்திர இந்தியாவில் தனிப் பெரும் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, தற்போது மிகவும் வலுவிழந்து காணப்படுவது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியாவில் வருகிற 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அதன் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.  நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 31 சட்டப்பேரவைகளில், காங்கிரஸ் கட்சி 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.
image
சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் முதல்வர்களாக உள்ளனர். அதிலும் நடந்து முடிந்த தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 7.53 சதவிகிதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம், 2017-ல் 6.3 சதவிகிமாக குறைந்தது. இதுகுறித்த மேலும் தகவல்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.