காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2022 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2022 ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 2022 செப்டம்பர மாதம்; 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும்; காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பாதுகாப்பான முறைகள் கொண்ட கணனி மென்பொருள் ஒன்றை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு ஒரு வருட காலம் செல்லுபடியாகும் புதிய தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை உரிமையாளருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தல்;
நிலைமை சீரானதன் பின்னர் உரிய அட்டை அச்சிடப்பட்டு விண்ணப்பதாரரின் வீட்டிற்கே நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரத்தை அனுப்பி வைத்தல்.