உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்துவரும் நிலையில், அங்கு அவர்களை எதிர்த்துள்ள அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியினர், இன்னும் தங்களுக்கான வெற்றிவாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.
சமாஜ்வாதி கட்சி சார்பில் இதுதொடர்பாக செய்யப்பட்டிருக்கும் ட்வீட்டில், “நம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், பிரமுகர்களுக்கும் சொல்லிக்கொள்கிறோம். தொலைக்காட்சிகளில் வருவனவற்றை வைத்து, அதில் பேசப்படும் விஷயங்களை நம்பி நீங்கள் யாரும் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். உங்களுடைய வாக்குச்சாவடிகளில் நம்பிக்கையுடன் இருங்கள். இறுதியில் ஜனநாயகமே வெல்லும். அந்தவகையில் இறுதி முடிவு நிச்சயம் சமாஜ்வாதி கட்சி கூட்டணிக்கு சாதகமாகவே அமையும்.
தேர்தலின் போக்குகளை கவனிக்கையில், சமாஜ்வாடி கட்சி கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கும் சட்டசபை தொகுதிகளின் விரிவான விவரங்கள், தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் மிக மெதுவாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. உ.பி. கோரக்பூர் கிராமத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காஜிபூரில் இதுவரை 16 ஆயிரம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. சமாஜ்வாதி கூட்டணி தலைமையிலான தொகுதிகளை எண்ணுவது ஏன் மெதுவாக நடைபெறுகிறது என தேர்தல் கமிஷன் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம், உடனடியாக விவரங்களை பதிவேற்றம் செய்யவும்.
उत्तर प्रदेश विधानसभा चुनावों के रुझानों में 100 सीटों का अंतर 500 वोटों के करीब है।
समाजवादी पार्टी गठबंधन के कार्यकर्ताओं, पदाधिकारियों एवं नेताओं से अपील है कि वो सतर्कता बनाए रखें।
— Samajwadi Party (@samajwadiparty) March 10, 2022
இதுவொரு புறமிருக்க, உ.பி.யில் 100 இடங்களில் சுமார் 500 வாக்குகள் வித்தியாசங்களிலேயே நாம் பின்தங்கி இருக்கிறோம். ஆகவே சமாஜ்வாதி கூட்டணியின் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தலைவர்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை அகிலேஷ் யாதவ் தரப்பில், “ஜனநாயகத்தின் சிப்பாய்கள் வெற்றி சான்றிதழுடன் மட்டுமே திரும்புவர். வாக்கு எண்ணும் மையங்களை ஜனநாயகத்தின் கோயிலாக நினைத்துக்கொண்டு, அங்கேயே நில்லுங்கள்” என்று ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை உ.பி.யில் பாஜக இம்முறை வெற்றிபெற்றால், கடந்த 30 ஆண்டுகளில் ஒரே கட்சி தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைக்கிறது என்ற பெருமை அக்கட்சிக்கு கிடைக்குமென்பதால், அவர்களும் வெற்றிக்காக முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்தி: கோவாவில் காங்கிரஸ், பாஜகவை தவிர வெற்றிக் கணக்கை தொடங்கிய இரண்டு கட்சிகள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM